Astro legand pulipani siddhar
'ரிக், யஜுர், சாமம, அதர்வணம்' என்னும் நான்கு வேதங்களிலும் முதன்மையாக கருதப்படுவது 'ரிக்' வேதமாகும். இந்த வேதத்தின் சாரம் தான் ஜோதிட சாஸ்திரம். இந்த சாஸ்திரம் குறித்து பகுத்தறிவாளர்கள் பலவாறாக, அவதூறாக கூறினாலும், இறுதியில் இந்த சாஸ்திரம் உண்மை என்பதை அறிவிக்காமல் அவர்களது அனுபவம் விடுவதில்லை! இதுதான் விதியின் அபார சக்தி! இந்த விதி சிலர்க்கு தெய்வம் என்ற மாயப் போர்வையிலும், சிலர்க்கு 'மதி' என்ற போர்வையிலும் ஆட்டிப் படைக்கிறது. சரியான காலம் வரும்போது, இந்த உலக இன்ப, துன்பங்கள் யாவும் நவக்கிரக சக்தியால் உருவாகி வருகிறது என்பதை உணர்கின்றனர். சுருங்கக் கூறின், நவக் கோட்களே உண்மையான தெய்வங்கள் எனலாம். தெய்வங்கள் என்று வழிபடுபவை எல்லாம் இவ்வுலகப் படைப்புகளில் ஓர் இனம் எனக் கூறலாம்.
Comments
Post a Comment